search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்"

    • ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் லவ்லினா, பர்வீன் ஹூடா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்,
    • இப்போட்டியில் இந்தியாவின் மீனாட்சி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    ஜோர்டான்:

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டிகள் இன்று தொடங்கியது.

    இந்த தொடரில் 75 கிலோ எடைப்பிரிவில் பெண்களுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. அந்த வகையில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ) இன்று உஸ்பெகிஸ்தானின் ருஸ்மெடோவா சொகிபாவை எதிர்கொண்டார்.

    போட்டியின் ஆரம்பத்திலிருந்தே தனது புத்திசாலித்தனமான நுட்பங்களையும் உத்திகளையும் திறம்பட பயன்படுத்திய லவ்லினா இறுதியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

    இதேபோல், 63 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பர்வீன் ஹூடா, ஜப்பான் வீரர் கிடோ மாயை எதிர்கொண்டார். இதில் 5-0 என்ற கணக்கில் பர்வீன் ஹூடா வென்று தங்கம் கைப்பற்றினார்.

    • இந்தியாவின் லவ்லினா, அல்பியா பதான் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    • இந்த தொடரில் இந்தியாவுக்கு ஏற்கனவே 12 பதக்கங்கள் உறுதியாகி இருந்தன.

    ஜோர்டான்:

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் 12 இந்திய வீரர், வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளதால் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு ஏற்கனவே 12 பதக்கங்கள் (குறைந்தது வெண்கலப் பதக்கம்) உறுதியாகி இருந்தன.

    இந்நிலையில், பெண்களுக்கான அரையிறுதி போட்டி நேற்று தொடங்கியது. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ) கொரிய குடியரசின் சியோங் சுயோனை எதிர்கொண்டார்.

    தொடக்கம் முதலெ புத்திசாலித்தனமாக ஆடிய லவ்லினா இறுதியில் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் அவர் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

    அதேபோல், இந்தியாவின் அல்பியா பதான் 81+ கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் அங்குஷிதா போரோ (75 கிலோ) தோல்வி அடைந்து வெண்கலம் வென்றார்.

    தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் அமித் பங்கால் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.#AsianChampionships #AmitPanghal
    பாங்காக்:

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரர் அமித் பங்கால், இறுதிச்சுற்றில் தென்கொரிய வீரர் கிம் இங்கியூவை எதிர்கொண்டார்.

    இந்திய வீரர் பங்காலின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு, கொரிய வீரரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. அடுத்தடுத்து குத்துகளை விட்டு புள்ளிகளைக் குவித்த அமித் பங்கால் எளிதில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் ஆண்டில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

    இதேப்போல் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கவிந்தர் சிங் பிஸ்த் 3-2 என்ற கணக்கில் மங்கோலியா வீரர் எங்க் அமர் காக்ஹூவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.  49 கிலோ பிரிவில் இந்தியாவின் தீபக் சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஆஷிஷ் குமார் (75 கிலோ), ஈரானின் செயெத்ஷஹின் மொய்சாவியை சாய்த்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார். #AsianChampionships #AmitPanghal
    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஷிவ தபா அரையிறுதியில் தோல்வியடைந்ததால் வெண்கல பதக்கமே வென்றார்.
    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 60 கிலோ எடைபிரிவில் இந்திய வீரர் ஷிவ தபா அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். இதனால் பதக்கத்தை உறுதி செய்தார்.

    இன்று அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த போபா-உஸ்மான் பேட்டுரோவ்-ஐ எதிர்கொண்டார். இதில் ஷிவ தபா தோல்வியடைந்தார். அரையிறுதியில் தோல்வியடைந்தாலும் வெண்கல பதக்கம் உண்டு என்பதால் ஷிவ தபா வெண்கல பதக்கம் வென்றார்.

    ஷிவ தபா 2013-ல் தங்கப் பதக்கமும், 2015-ல் வெண்கல பதக்கமும், 2017-ல் வெள்ளி பதக்கமும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×